பாவங்களிலிருந்து விடுவிக்கும் பரிசுத்த ஆவியானவர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பயமும் வெட்கமும் நம்மை அடிமைப்படுத்தும். ஆனால் நாம் நம் அன்பு தகப்பனிடம் சென்று அவற்றை அறிக்கைசெய்தால், அவர் எல்லா பாரத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். பயத்திலிருந்து, அக்கிரமத்திலிருந்து, பாவத்தின் சாபத்திலிருந்து அந்த ஆவியானவர் உங்களுக்கு விடுதலை அருளுவார். இயேசுவின் இரத்தம் உங்களை முற்றிலும் சுத்திகரித்து புதிதான வாழ்க்கையை உங்களுக்கு தருவார். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, தகப்பனின் ஆசீர்வாதத்தை அவர் கொண்டு வருகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து உங்கள் பாவத்திலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் இப்போதே விடுபடுங்கள்.
Related Videos