நீங்கள் விசேஷித்தவர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், உங்கள் தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார். உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்திருக்கிறார். அவரால் கூடாத காரியம் எதுவுமில்லை. உங்கள் கண்ணீர் வீணாகப்போகவில்லை;உங்கள் ஜெபங்கள் மறக்கப்படவில்லை. விசுவாசத்தோடு அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் அவரே செய்துமுடிப்பார். உங்கள் பெயரை, உங்கள் தேவைகளை, உங்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கிற அவர் உண்மையுள்ளவர். அவரை நம்புங்கள். உங்கள் வாழ்க்கையில் அவர் அற்புதம் செய்வதைக் காண்பீர்கள். இன்றைக்கான ஆசீர்வாத செய்தியைப் பார்த்து மேலும் அறிந்துகொண்டு இருதயத்தில் இளைப்பாறுதல் பெறுங்கள்.
Related Videos